கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைக்கிறார்.
விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமை இடமாகக் கொண்டு, புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாவட்ட துவக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, இன்று கள்ளக்குறிச்சியில் நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய மாவட்டத்தை துவக்கி வைக்கிறார். பின்னர் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர், அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.விழாவிற்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார். அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதையொட்டி கள்ளக்குறிச்சி விழாக் கோலம் பூண்டுள்ளது. முதல்வரின் வருகையையொட்டி 2 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
Discussion about this post