அயோத்தியில் 67 ஏக்கர் நிலத்தை திரும்பக் கேட்பது பாஜகவின் அரசியல் தந்திரம் என மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்
சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் 67 ஏக்கர் நிலத்தை நிலத்தின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இதில் ராமஜென்ம பூமி நியாஸ் என்ற அறக்கட்டளை தனக்கு சொந்தமான 42 ஏக்கர் நிலத்தை திரும்ப ஒப்படைக்கும்படி கேட்டு விண்ணப்பித்துள்ளது. எனவே கூடுதலாக கையகப்படுத்திய நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கலாம் என்ற முடிவை மத்திய அரசு முக்கிய கொள்கை முடிவாக எடுத்துள்ளது. இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பேசுகையில், உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியுடன் நாங்கள் கூட்டணி அமைத்ததால், இனிமேல் ஆட்சிக்கு வர முடியாது என்று பா.ஜனதா உணர்ந்து கொண்டது. எனவே, விரக்தியின் வெளிப்பாடாக இம்முடிவை எடுத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவின் தேர்தல் நேர தந்திரம் என்றும் மாயாவதி கூறியுள்ளார்.
Discussion about this post