வலைதள சந்தை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால், இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு குறையும் என அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. மத்திய அரசு, வலைதள சந்தை நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளுக்கு கடிவாளம் போடும் வகையில், மின்னணு வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது.
இது, 2019 பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதனால், ‘அமேசான், பிளிப்கார்ட்’ உள்ளிட்ட வலைதள சந்தை நிறுவனங்கள், விற்பனை பொருட்களுக்கு, தள்ளுபடி சலுகைகளை தாராளமாக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள், நுகர்வோரை பாதிக்கும் என்றும், இந்தியாவில், அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய தயங்கும் எனவும் அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
“வால்மார்ட்” போன்ற நிறுவனங்கள், இந்தியாவில் பெருந்தொகையை முதலீடு செய்துள்ள நிலையில், அரசின் நடவடிக்கை, அன்னிய நேரடி முதலீடுகளை கட்டுப்படுத்தவே வழிவகுக்கும் எனவும் வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Discussion about this post