பிரான்ஸ் நாட்டிடம் இருந்து விடுதலை வேண்டாம் என்று நியூ கலிடோனியா தீவு மக்கள் வாக்களித்துள்ளனர். பிரான்சின் கடல் கடந்த மண்டலமாக விளங்கி வரும் நியூ கலிடோனியா மண்டலத்தில் இரண்டரை லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மண்டலத்தில் மின்னணு சாதனங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் நிக்கல் அதிகளவில் கிடைப்பதால், பொருளாதார ரீதியில் இப்பகுதியை முக்கியமான பகுதியாக பிரான்ஸ் கருதுகிறது.
ஆனால் இந்த பகுதியை பிரான்சிடமிருந்து பிரித்து, சுதந்திர நாடாக அறிவிக்க வேண்டும் என்று பிரிவினைவாதிகள் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்த பகுதி பிரான்சின் ஒரு பகுதியாக நீடிக்க வேண்டுமா அல்லது தனி நாடாக அறிவிக்க வேண்டுமா என்பது குறித்து அப்பகுதியில் நேற்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் திரளான மக்கள் வாக்களித்தனர்.
இதனிடையே, இந்த வாக்கெடுப்பில் 56.9 சதவிகித மக்கள், பிரான்சிடம் இருந்து விடுதலை வேண்டாம் என்று வாக்களித்துள்ளனர். இதனால், பிரிவினைவாதிகளின் தனிநாடு கோரிக்கை தோல்வியடைந்துள்ளது.
Discussion about this post