தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்க, 30 புதிய பேருந்துகளை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு, பயணிகளின் நலன் கருதி, தர்மபுரி மண்டலத்திற்கு 30 புதிய போருந்துகள் ஒதுக்கீடு செய்தது. இதன் தொடர்ச்சியாக, தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஒசூர், மதுரை, வேலூர், ஈரோடு, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகரப் பகுதிகளுக்கான சேவையை, தர்மபுரி நகரப் பேருந்து நிலையத்தில், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, மாவட்ட ஆட்சியர் மலர்விழி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Discussion about this post