சென்னை அடுத்த திருமழிசையில் புதிதாக கட்டப்பட உள்ள பேருந்து நிலையத்துக்கான திட்ட வடிவமைப்பு குறித்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பேருந்து முனையத்துக்கான பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார். திருமழிசையில் அமைய உள்ள பேருந்து நிலையத்தின் மூலம் போக்குவரத்து பெருமளவு குறைய வாய்ப்புள்ளது எனவும், பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என்றும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டார்.
Discussion about this post