வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் மெகுல் சோக்சியின் உதவியாளரை கொல்கத்தா விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது நெருங்கிய உறவினருமான மெகுல் சோக்சி ஆகியோர், பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றனர். 13 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மெகுல் சோக்சிக்கு சொந்தமான வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து 218 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ச்சி ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்தநிலையில், இவர்களின் நெருங்கிய கூட்டாளியான தீபக் குல்கர்னி இந்தியா வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்தநிலையில், கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்த தீபக் குல்கர்னியை போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post