தமிழகத்தில் கேரள மாநில மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழக இயற்கை மற்றும் சுற்றுசூழல் மேம்பாட்டு சங்க துணை தலைவர் சிதம்பரம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கேரள மாநிலத்திலிருந்து கொண்டு வரப்படும் மருத்துவ கழிவுகள் நெல்லை மாவட்டம் புளியங்குடி, சொக்கம்பட்டி கிராமங்களில் கொட்டப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக சுற்றுவட்டாரத்தில் வசிக்க கூடிய மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதாகவும், ஆதலால் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.