தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நடிகை சுஹாசினி தெரிவித்தார்.
சென்னை சேத்துப்பட்டில் தூக்கமின்மை, குறட்டையிடுதல் ஆகிவற்றை அளவிடும் வகையில் புதிய செயலி அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை சுஹாசினி, இயக்குநர் வசந்த், நடிகர் படவா கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை சுஹாசினி, தூக்கமின்மையால் இளைஞர்கள் அவதிப்படுவதற்கு இன்றைய வாழ்க்கை முறையே காரணம் என்று கூறினார். நள்ளிரவு தொடங்கி அதிகாலை 2 மணி வரை செல்போன், லேப்டாப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் இளைஞர்கள் பலர் உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாகவும், பொருளாதார அளவில் இந்தியா வளர்ச்சி அடைய இது போன்ற பிரச்சினைகளை களைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Discussion about this post