நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 200 ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே கொண்டாடி வரும் விநோத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள மலையாம்பட்டி கிராமத்தில், புகழ் பெற்ற பொங்காலாயி அம்மன் கோயில் உள்ளது. கற்சிலை மட்டுமே உள்ள இந்த கோவிலில் கடந்த 200 வருடங்களுக்கும் மேலாக ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டதை, தொடர்ந்து பொங்காலாயி அம்மனுக்கு படையல் மற்றும் பொங்கல் வைத்து ஆண்கள் பூஜை நடத்தினர். அதைத் தொடர்ந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், கிடா வெட்டி விருந்து படைத்தனர். வெட்டப்பட்ட கிடாக்கள் கொண்டு சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
Discussion about this post