17 வது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
நேற்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியவுடன் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றது. நேரம் செல்லச்செல்ல பெரும்பான்மையைத் தாண்டி பாஜகவுக்கு 303 இடங்கள் கிடைத்தன. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம் போன்ற கூட்டணி கட்சிகளும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி முகம் காட்டின. பாஜக கூட்டணி 350 இடங்களில் முன்னிலை வகித்த போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 92 இடங்களிலேயே முன்னிலை வகித்தது. இதர கட்சிகள் 102 இடங்களில் முன்னிலை வகித்தன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாயாவதி – அகிலேஷ் யாதவ் கூட்டணியும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. உபியில் உள்ள 80 தொகுதிகளில் 63 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றது. இதேபோல குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகித்தது.
Discussion about this post