நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
நெல்லை மாவட்டம் மேலக்குளத்தில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வரும், துணை முதல்வரும் பிரசாரம் செய்து வருவதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார். அதிமுகவை யாரும் அசைக்க முடியாது என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
Discussion about this post