5வது முறையாக ஒடிஷா முதலமைச்சராக நவீன் பட்நாயக் பதவியேற்றுக் கொண்டார்.
மக்களவை தேர்தலுடன் ஆந்திரா , ஒடிசா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. 146 தொகுதிகளைக் கொண்ட ஒடிஷாவில், பிஜூ ஜனதா தளம் 112 இடங்களைப் பிடித்து ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், 5வது முறையாக நவீன் பட்நாயக் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஒடிஷா ஆளுநர் கணேஷிலால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனிடையே முதல்வராக பதவியேற்றுள்ள நவீன் பட்நாயக்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி, டுவீட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Discussion about this post