தமிழகத்தில் தற்போது பரவலாக மழைப் பெய்து வருவதால் காய்கறி சாகுபடிகள் அமோகமாக நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த பேயாலம்பட்டு கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்ற விவசாயி, தனக்கு சொந்தமான 50-சென்ட் நிலப்பரப்பில் புடலங்காய் சாகுபடி செய்து வருகிறார். இதற்கென்று, கல் பந்தல் அமைத்து ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல், இயற்கை முறையில் புடலங்காய் விதைகளை நடவு செய்துள்ளார்.
மேலும், தனது தோட்டத்தில் இயற்கை முறையில் விளைந்த தரமான புடலங்காய்களை செங்கம், திருவண்ணாமலை போன்ற நகரங்களுக்கு விற்பனை செய்து வருகிறார். இதே போல, நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள செட்டிப்புலம் கிராமத்தில், பன்னீர்செல்வம் என்பவர், தனக்கு சொந்தமான இடத்தில் பாவை புடலை சாகுபடி செய்து வருகிறார். இதற்கு உரமாக கால்நடைக் கழிவுகள் மூலமும், இலை தளைகள் மூலமும் தயாரிக்கப்பட்ட பசுந்தாள் உரங்களைப் பயன்படுத்தி வருகிறார்.
எந்த விதாமான ரசாயன உரத்தையும், பூச்சி கொல்லிகளையும் பயன்படுத்தாமல், இயற்கை முறையில் விளைந்துள்ள பாவை புடலையை, வியாபாரிகளும், பொதுமக்களும் பன்னீர் செல்வத்தின் வீட்டிற்கே வந்து வாங்கிச் செல்கின்றனர்.
Discussion about this post