மலை பிரதேசங்களில் மட்டுமே விளையும் மோரிஸ் வாழையை நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலில் சாகுபடி செய்து பட்டதாரி இளைஞர் சாதனை படைத்துள்ளார். திருமருகலை அடுத்த அம்பல் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான ராதாகிருஷ்ணன், தோட்டக்கலைத்துறை மூலம் அளிக்கப்பட்ட வேளாண் பயிற்சியில் கலந்து கொண்டார். அவருக்கு மோரிஸ் வகையைச் சேர்ந்த வாழைப்பழங்கள் பயிரிடுவது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 100 சதவீத மானியத்தில் வாழைக் கன்றுகள் வழங்கப்பட்டன. தனக்கு சொந்தமான நிலத்தில் இந்தக் கன்றுகளை பயிரிட்ட ராதாகிருஷ்ணன், ரசாயன உரங்களைத் தவிர்த்து இயற்கை உரங்களையே பயன்படுத்தி வந்தார். தற்போது வாழை நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளதுடன் நல்ல லாபம் கிடைப்பதாக தெரிவித்த அவர் தமிழக அரசுக்கு நன்றி கூறினார்.
Discussion about this post