விளையாட்டு துறைகளில் சாதனை புரிந்த வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
விளையாட்டு வீரர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு ஆண்டு தோறும் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி விளையாட்டு வீரர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். விளையாட்டு துறையில் வழங்கப்படும் இந்திய அரசின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் மாற்றுத் திறனாளி தடகள வீராங்கனையான தீபா மாலிக் ஆகியோருக்கு வழங்கபட்டது.
கிரிக்கெட் வீரர் ஜடேஜா, தமிழகத்தை சேர்ந்த பாடி பில்டிங் வீரர் பாஸ்கரன், பாட்மிண்டன் வீரர் சாய் ப்ரணீத் உள்ளிட்ட 20 பேருக்கு அர்ஜூனா விருதும், பயிற்சியாளருக்கு வழங்கப்படும் துரோணாச்சாரியா விருது, தடகள பயிற்சியாளர் மோஹிந்தர் சிங் திலோன், பாட்மிண்டன் பயிற்சியாளர் விமல் குமார் உள்ளிட்ட 6 பேருக்கு வழங்கப்பட்டது.
இதேபோல், வாழ்நாள் சாதனையாளர் விருது, மல்யுத்த வீரர் மனோஜ் குமார், வில்வித்தை வீரர் லால்ரென்சங்கா உள்ளிட்ட 5 பேருக்கு வழங்கப்பட்டது.