நீர் மேலாண்மை பணிகளைச் சிறப்பான முறையில் செயல்படுத்திய திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேசிய ஸ்கோச் விருது கிடைத்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தேசிய அளவில் கண்டறியப்பட்ட 250 நீர் வறட்சி மாவட்டங்களில் திருவண்ணாமலையும் ஒன்றாக இருந்தது. இதையடுத்து, மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பின், 87 கோடியே 85 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 223 கல் தடுப்பு அணைகள், 282 சிமெண்ட் கான்கீரிட் தடுப்பு அணைகள் அமைத்தது உள்பட ஆயிரக்கணக்கான நீர் மேலாண்மை பணிகள் திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டன.
வீடுகளில் மழை நீர் சேகரிப்பை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டு, பொதுமக்களிடம் நீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு உண்டாக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் இந்தப் பணிகளை மதிப்பிட்டு, ஸ்கோட்ச் நிறுவனம், தேசிய வாட்டர் அவார்டு என்ற விருதை, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வழங்கி உள்ளது.
Discussion about this post