தேசிய அறிவியல் தினம் இந்தியாவில் ஆண்டுதோறும் பிப்ரவரி 28 ஆம் தேதி கொண்டுவரப்படுகிறது. தேசியத் தலைவர்களையும் தியாகிகளையும் கொண்டாடி கெளரவிப்பதுபோல அறிவியல் கண்டுபிடிப்பாளர்களையும் கெளரவிக்கும் வகையில் இந்தத் தினமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றைக்கு ஏன் கொண்டாடுகிறோம் என்றால்? இன்றுதான் மறைந்த நோபல் பரிசுப்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர் சர்.சி.வி.இராமன் அவர்கள் ராமன் சிதறலைக் கண்டறிந்த தினமாகும். . ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு என்று அவரது பெயரே சூட்டப்பட்டது. இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இவரின் நினைவினைப் போற்றும் வகையில்தான் நாடு முழுவதும் இன்றைக்கு அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.
Discussion about this post