ஆசிய சாதனை படைத்த அஜித்!
பாரா தடகள சாம்பியன்ஷிப் வட்டு எறிதலில் போட்டி பாரிசில் நடைப்பெற்றது. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த அஜித் குமார் என்பவர் களமிறங்கினார். வட்டு எறிதலில் போட்டியில் ஆசிய சாதனை படைத்து தங்க பதக்கத்தை கைப்பற்றினார். பாரிசில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. அதில் ஆண்களுக்கான பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் அஜித் குமார் பன்சால் களமிறங்கினார். இவர் களமிறங்கிய இரண்டு சுற்றுகளிலும் தனது திறனை வெளிக்காட்டினார் அடுத்து இவரருக்கான மூன்றாவது வாய்பில் அதிகபட்சமாக 21.17 மீட்டர் தூரம் எறிந்து சாதனைப் படைத்தார். அதனை அடுத்து தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றினார். இதுவே இந்தியாவின் புதிய ஆசிய சாதனையாகவும் அமைந்தது. இவரைத் தொடந்து யேகேஷ் என்ற மற்றொரு வீரரும் களமிறங்கினார்.
வெள்ளி பதக்கம் வெற்ற யோகேஷ்:
வட்டு எறிதல் மற்றொரு பிரிவில் இந்திய சார்பில் களமிறங்கினார் யோகேஷ் கதுனியா. டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இவர் ஏற்கனவே இவர் வெள்ளி வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை முதல் வாய்ப்பில் அதிகபட்சமாக 43.17 மீட்டர் தூரம் எறிந்தார். மற்ற வாய்புகளை நலுவ விட்டாலும் விட்ட இடத்தை சற்று நேரத்திலேயே பிடித்தார். முதல் இடம் கிடைக்கவில்லை எனினும் இரண்டாவது இடத்தை பிடித்து சாதனைப் படைத்தார். வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினார். இதனை தொடர்ந்து பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கவும் தகுது பெற்றார். ஆண்கள் குண்டு எறிதலில் இந்தியவின் ரவி ரங்காலி அதிகபட்சம் 8.90 மீட்டர் தூரம் எறிந்தார்.