தமிழகத்தின் பிரதான சாலையான சென்னை – கன்னியாகுமரி இடையிலான 705 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை, 8 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மொத்தம் 2 கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 847 வாகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே துறைமுக விரிவாக்கம், புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான பணிகளும் நடந்து வருவதால் போக்குவரத்து கட்டமைப்பு வசதியை மேம்படுத்த சாலை விரிவாக்க பணிகளும் நடந்து வருகின்றன.
எனவே தமிழகத்தின் பிரதான சாலையான சென்னை-கன்னியாகுமரி இடையிலான 705 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது. இந்த சாலையை 8 வழி சாலையாக விரிவாக்கம் செய்ய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Discussion about this post