சேலம் மாவட்டத்தில் தேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி, 23 ஆயிரம் சதுர அடியில் வரையப்பட்ட பிரமாண்ட ஓவியம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
தேசிய பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், சேலம் மாவட்டம் காந்தி மைதானத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பிரமாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, அரசு அதிகாரிகள், பெண்கள் பாதுகாப்பு அமைப்புகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ரோகிணி, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும் என தெரிவித்தார். மேலும், பெண் குழந்தைகளின் சதவீதத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post