தேசிய கல்விக் கொள்கையை 17 மாநில மொழியில் ஏற்கெனவே வெளியிட்ட மத்திய கல்வி அமைச்சகம், தற்போது அதனை தமிழிலும் வெளியிட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு, புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை, கடந்த ஆண்டு ஜூலை 29ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. தொடக்கத்தில் இந்தி, ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் மட்டுமே தேசிய கல்வி கொள்கை வெளியிடப்பட்டது. இதற்கான மாநில மொழி பெயர்ப்புகள் வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
அதன்படி, சில தினங்களுக்கு முன்பு, குஜராத்தி, பெங்காலி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 17 மாநில மொழிகளில், கல்விக் கொள்கையின் மொழி பெயர்ப்பு வெளியானது. அதில், தமிழ் மொழியில் தேசிய கல்விக் கொள்கை ஆவணம் வெளியாககாததால், தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், தற்போது அந்த ஆவணத்தை மத்திய அரசு தமிழில் வெளியிட்டுள்ளது.
Discussion about this post