வைர வியாபாரி நிரவ் மோடியின் காவலை மே 24ம் தேதிவரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் தேசிய வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி சென்றனர். இதுகுறித்து சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இந்திய அரசின் முயற்சியால், நிரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா கொண்டுவரும் முயற்சியில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது. நிரவ் மோடியை நாடுகடத்தும் வழக்கு லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இருமுறை நிரவ் மோடி ஜாமீன் கோரிய நிலையில், அவரது கோரிக்கையை லண்டன் நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில், லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் வான்ட்ஸ்வொர்த் சிறையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிரவ் மோடியின் காவலை மே 24ம் தேதிவரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post