சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பூலித்தேவனின் வீரமும், உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளிப்பதாக பிரதமர் நரேந்திர மோதி பூலித்தேவனின் பிறந்த நாளில் புகழாரம் சூட்டியுள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 307-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோதி தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது பெருமை குறித்து தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவரது வீரமும், உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள வாழ்த்துப்பதிவில், ”மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post