நேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழந்தனர்.
நேபாள தலைநகரான காத்மண்டுவில் சுகேதரா, கட்டிகுலோ மற்றும் நாக்துங்கா உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குண்டுவெடிப்பை தொடர்ந்து அந்த பகுதி உள்பட பல்வேறு முக்கிய இடங்கள் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. காத்மண்டுவின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குண்டுவெடிப்பு தொடர்புடையதாக சந்தேகப்படும் 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்தவொரு இயக்குமும் பொறுப்பேற்கவில்லை.
Discussion about this post