பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில், பாவ்லி சென் கோவாவை வீழ்த்தி நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
பான் பசிபிக் ஓபன் டென்னிஸின், பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் நடைபெற்றது. இதில் உலக தர வரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, ரஷ்யாவின் பாவ்லி சென் கோவாவை எதிர் கொண்டார். 69 நிமிடம் நடந்த ஆட்டத்தில் நவோமி ஒசாகா 6க்கு2, 6க்கு3 என்ற நேர்செட்டில் பாவ்லி சென் கோவாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
2016, 2018-ம் ஆண்டுகளில் 2-வது இடம் பிடித்த நவோமி ஒசாகா, சொந்த மண்ணில் முதல்முறையாக பட்டத்தை வென்று அசத்தினார். இந்த ஆண்டில் நவோமி ஒசாகா வென்ற 2-வது சாம்பியன் பட்டம் இதுவாகும். தற்போது ஒசாகா 470 தரவரிசை புள்ளியுடன், ரூபாய் 1 கோடி பரிசு தொகை பெற்றுள்ளார். 2-வது இடம் பெற்ற பாவ்லி சென் கோவா ரூபாய் 54 லட்சத்தை பரிசாக பெற்றார்.
Discussion about this post