ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் செக்குடியரசின் பெட்ரா கிவிடோவாவை வீழ்த்தி ஜப்பானின் நவோமி ஒசக்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி சுற்றுப் போட்டியில் தரவரிசையில் 4 ஆம் நிலை வீராங்கனையும், ஜப்பானை சேர்ந்தவருமான நவோமி ஒசக்கா, 8-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் பெட்ரா கிவிடோவாவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில், முதல் செட்டை 7க்கு 6 என்ற கணக்கில் வென்ற ஒசக்கா, அடுத்த செட்டை 5க்கு 7 என்ற கணக்கில் பறிகொடுத்தார். பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒசக்கா 6க்கு 4 என்ற செட் கணக்கில் கிவிடோவாவை வென்று ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.