எல்.முருகனுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நமீதா

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் எல்.முருகனை ஆதரித்து திரைப்பட நடிகை நமீதா வாக்கு சேகரித்தார்.

 

தாராபுரம் தொகுதிக்குட்பட்ட குண்டம், சின்ன புத்தூர், கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என தெரிவித்த நடிகை நமீதா, வரும் நாட்களில் மாநிலம் முழுவதும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

Exit mobile version