350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாமக்கல், கரூர் ரயில் பாதை மின் மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் இம்மாத இறுதியில் சோதனை ஓட்டம் நடைபெறும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஈரோடு-கரூர்-திருச்சி, கரூர்-திண்டுக்கல், சேலம்-கரூர் அகல ரயில் பாதைகளை முற்றிலும் மின்மையமாக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சேலம்-கரூர் அகல ரயில் பாதையில் நாமக்கல் வழியாக 85 கிலோ மீட்டர் தொலைவிற்கு மின் மையமாக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள்
ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான மின்விநியோக பணிகள் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சேலம்-கரூர் இருப்புப்பாதை மின் மையமாக்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும், டிசம்பர் மாத இறுதிக்குள்
100 சதவீதம் பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடைபெறும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.