நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே தாய் யானையைப் பிரிந்து தவித்த ஒரு மாதமேயான குட்டியானை, மீண்டும் தாய் யானையுடன் வனத்துறையினரால் சேர்த்துவைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில், தனியாக தவித்துவந்த பிறந்து ஒரு மாதமேயான குட்டியானை அண்மையில் வனத்துறையினரால் மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குட்டியின் தாய் யானையை தேடும் பணியில் 6 குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் வனப்பகுதியில் ஒரு யானைக்கூட்டம் இருந்ததை உறுதி செய்த வனத்துறையினர், குட்டி யானையின் மீது சேற்றையும் சாணத்தையும் பூசி அதன் அருகே அனுப்பி வைத்தனர். குட்டி யானையின் சத்தம் கேட்டு கூட்டத்திலிருந்து வந்த ஒரு யானை, குட்டி யானையை அழைத்து சென்றது.
தனித்திருந்த குட்டி யானை தாய் யானையுடன் இணைந்த நிகழ்வு அங்கிருந்தவர்களை நெகிழ்வில் ஆழ்த்தியது.
Discussion about this post