தன்னை சிறையில் இருந்து விடுதலை செய்ய ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி, நளினி உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யவுள்ளார் என அவரது வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினியை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதைத் தெரிவித்தார். இந்நிலையில் இந்த ரிட் மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post