சிலை கடத்தல் விவகாரத்தில் பொய்யான தகவலை வெளியிட்ட நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
திண்டிவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நீதிபதி நளினிதேவியிடம் தன்னுடைய புகார் மனு குறித்து நேரில் தகவல் அளித்தார். சிலை கடத்தல் விவகாரத்தில், எந்தவிதமான சாட்சியங்கள் இன்றி அரசுக்கும், அமைச்சர்கள் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், உள்நோக்கத்துடன் பொய்யான தகவலை நக்கீரன் வெளியிட்டதாக அவர் கூறினார்.
நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் மற்றும் தலைமை நிரூபர் தாமோதரன், பிரகாஷ் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் ஐ.பி.சி 499, 500, 501, ஆகிய பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் சி.வி. சண்முகம் கேட்டுக் கொண்டார்.