தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தொடர்புபடுத்தி, பிரபல வார இதழான நக்கீரனில் கட்டுரை வெளியிட்டு, சர்ச்சையில் சிக்கினார் அதன் உரிமையாளரும், ஆசிரியருமான கோபால்.
இந்த சர்ச்சையை தொடர்ந்து ஆளுநர் மாளிகையின் செயலாளர் அளித்த புகாரின் பேரில் இன்று காலை அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அங்கிருந்து அவர் சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் கொண்டு வந்து அமர வைக்கப்பட்டார். அவர் மீது செக்ஸன் 1.1ஏ மற்றும் இபிகோ 124 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் எழும்பூர் அல்லிகுளம் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி கோபிநாத் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கோபால் தரப்பில் வழக்கறிஞர் பெருமாள் ஆஜரானார்.
விசாரணைக்கு பிறகு வழக்கின் மீதான உத்தரவை வழங்காமல் நீதிபதி ஒத்திவைத்திருந்தார். சுமார் ஒரு மணி நேர இடைவேளைக்கு பிறகு நக்கீரன் கோபால், விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.
ஆளுநர் மாளிகை தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால், தற்போது விடுதலையாகியுள்ளார்.
Discussion about this post