நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களை கஜா புயல் அதிகமாக பாதித்த இடங்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் வீசிய கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிப்புகளை முதலமைச்சர், மற்றும் துணை முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்நிலையில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களை கஜா புயல் அதிகமாக பாதித்த இடங்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கஜா புயலால் மிதமான பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளாக திண்டுக்கல் மேற்கு, திருச்சி மாவட்டத்தின் மருங்காபுரி, மணப்பாறை தாலுகாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறைவான பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளாக, திண்டுக்கல் மாவட்டத்தின் நிலக்கோட்டை, நத்தம், ஆத்தூர், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் தாலுகாக்களும்
கரூர் மாவட்டத்தின் கடவூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், கரூர், மண்மங்கலம் தாலுகாக்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேபோல், கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோயில், விருத்தாச்சலம் தாலுகாக்களும் ,
மதுரை மாவட்டத்தில் மேலூர், உசிலம்பட்டி, பேரையூர், வாடிப்பட்டி, கள்ளிக்குடி, திருமங்கலம் ஆகிய தாலுகாக்களும்
சிவகங்கை மாவட்டத்தின் சிங்கம்புணரி, காரைக்குடி, காளையார்கோவில், திருப்புவனம், ஆகிய தாலுகாக்களும் குறைவான பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தின் கீழக்கரை, பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானை தாலுகாக்களும், திருச்சி மாவட்டத்தின் திருவெறும்பூர், மணச்சநல்லூர், முசிறி, துறையூர், உள்ளிட்ட தாலுகாக்களும் குறைவான பாதிப்புகளைக் கண்டுள்ள இடங்களாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Discussion about this post