மதுரையில் டீ கடை உரிமையாளரை கடைக்குள் வைத்து கொடூரமாக வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை சிசிடிவி உதவியுடன் 24 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் டீக்கடையை கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சிலர் கஞ்சா போதையில் கடைக்கு வருபவர்களிடம் தகாராறு செய்ததை தொடர்ந்து அவர்கள் மீது மாரிமுத்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் மாரிமுத்துவை கடையில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அனைத்தும் அவரது கடையில் உள்ள சிசிடிவி கேமிரா மூலம் பதிவு செய்யபட்டிருந்த நிலையில் இந்த காட்சிகள் அடிப்படையில் தல்லாகுளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, கொலையில் தொடர்புடைய 4 இளைஞர்களை தற்போது கைது செய்து உள்ளனர்.
Discussion about this post