ஜெயங்கொண்டம் அடுத்த சோழமாதேவி கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலமுருகன் ரஞ்சிதா தம்பதியர். கடந்த சில மாதங்களாக பாலமுருகன் குடும்பத்திற்கும், ரஞ்சிதா குடும்பத்திற்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாலமுருகன் வீட்டில் மர்மமான முறையில் ரஞ்சிதா உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து சோழமாதேவி கிராமத்திற்கு ஆம்புலன்சில் உடல் வந்துகொண்டிருந்த போது ரஞ்சிதாவின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ரஞ்சிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், எனவே அவரது மாமியார் மற்றும் உறவினர்களை கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர். அப்பகுதிக்கு வந்த போலீசார் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தபின் அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Discussion about this post