சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தனியார் உணவக உரிமையாளரை சரமாரியாக கத்தியால் தாக்கிய மர்ம நபரை கண்காணிப்பு கேமரா காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சிந்தாதிரிப் பேட்டை சிக்கண்ணா தெருவில் பழனிநாதன் மற்றும் செந்தில் ஆகிய இருவரும் எதிரெதிரே உணவகங்களை நடத்தி வருகின்றனர். தொழில்போட்டி காரணமாக இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பழனிநாதனை அடையாளம் தெரியாத நபர் கத்தியால் சரமாரியாகத் தாக்கினார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பழனிநாதன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.
Discussion about this post