புதுக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி வீட்டில் நான்கு சக்கர வாகனதிற்கு மர்ம நபர்கள் தீ வைத்த வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிஜாம் காலனி பேலஸ் நகரில் வடிவேல் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். புதுக்கோட்டை பாஜக மாவட்ட தலைவரான இவரின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் அதிகாலை தீ பற்றி எரிந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். இது தொடர்பாக வடிவேல் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Discussion about this post