கனடாவில் போலீஸ் உடையில் வந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பெண் காவல் அதிகாரி உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். கனடா நாட்டின் நோவா ஸ்காட்டா மாகாணத்தில் போலீஸ் வாகனத்தில் வந்த நபர் ஒருவர், திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார். அங்கிருந்த வீடுகளிலும் அவர் தாக்குதல் நடத்தினார். இதில் பெண் காவலர் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் அந்த நபரை சுட்டுக் கொன்றனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் பெயர் கெப்ரியல் வார்ட்மென் என்பதும், அவர் பல் மருத்துவத்துறையில் பணியாற்றி வந்தவர் என்பதும் தெரிய வந்தது. 1989ஆம் ஆண்டுக்கு பிறகு கனடாவில் நடத்தப்பட்ட மிக மோசமான துப்பாக்கிச்சூடு இது என கூறப்படுகிறது. கொரோனா எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கனடாவில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post