பிரபல நாடக நடிகர் தீபக்கின் தந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடக நடிகரான தீபக் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வருகிறார். தனது தாய், தந்தையுடன் சென்னை அரும்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக தந்தை விட்டல் டிங்கர் ராவிற்கு தொடர்ந்து தொலைப்பேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார். அழைப்பை எடுக்காததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், பூட்டிய வீட்டை திறந்து பார்த்த போது, படுக்கை அறையில் அவர் இறந்த நிலையில் கிடந்தார்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post