தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகை மதுமிதா தன் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்டு வரும் பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியில் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், விதிமுறைகளை மீறியதாக கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் தனக்கு தர வேண்டிய பாக்கி தொகையை தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் நடிகை மதுமிதா மீது கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய மதுமிதா, தன் மீதான புகார் முற்றிலும் பொய் புகார் என தெரிவித்தார்.
Discussion about this post