விடுதலை புலிகள் குறித்த சர்ச்சை கருத்துக்கு இலங்கை முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் விளக்கமளித்துள்ளார்.
விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்வின் சிறந்த நாள் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னால் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்து இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை உண்டாக்கியது. இதற்கு விளக்கமளித்துள்ள முத்தையா முரளிதரன், இலங்கையில் போர் முடிந்ததும் தங்களுக்கு இருந்த அச்சம் விலகி விட்டதாகவும், இதை கருத்தில் கொண்டே விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாள் வாழ்வின் சிறந்த நாள் எனக் கூறியதாக விளக்கமளித்துள்ளார். மேலும், தான் அரசியலுக்கு வரப்போவதும் இல்லை, நாட்டை ஆளப்போவதும் இல்லை என்று கூறிய அவர், சாரசரி மனிதனாக தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்ததாக தெரிவித்தார்.
Discussion about this post