விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை கொழும்புவில், ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே பங்கேற்ற நிகழ்வில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் கலந்துகெண்டு உரையாற்றினார். அப்போது, இலங்கை அரசோடு நடந்த சமாதான பேச்சுவார்த்தைகளில் விடுதலைப் புலிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர்கள் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் அப்பாவிகளை கொன்றுவிட்டனர் என்று முரளிதரன் கூறினார்.
2009-ல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு யுத்தம் முடிவுக்கு வந்த நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற போரில் இரு தரப்பும் தவறிழைத்தன. ஒரு கட்டத்தில் அரசாங்கம் தவறிழைத்தது. பின்னர் விடுதலைப் புலிகள் தவறிழைத்தனர் என்றும் முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post