79 வயதில் விடாமுயற்சியோடு, மூன்றாவது முறையாகப் போட்டியிட்ட மூதாட்டி வீரம்மாள், மதுரை மாவட்டம், மேலூர் ஒன்றியத்துக்குட்பட்ட அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.
மதுரை மாவட்டம், மேலூர் ஒன்றியத்துக்குட்பட்ட அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான முடிவும் வெளியானது. அப்பதவிக்குப் போட்டியிட்ட 79 வயது மூதாட்டி வீரம்மாள் வெற்றி பெற்றுள்ளார். 195 வாக்கு வித்தியாசத்தில் அவர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். வீரம்மாள் ஏற்கெனவே இரண்டுமுறை அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தவர். 79 வயதில் விடாமுயற்சியோடு மூன்றாவது முறை அவர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற வீரம்மாளுக்கு, அந்த ஊர் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மாலைகள் அணிவித்துப் பாராட்டுத் தெரிவித்தனர்.
Discussion about this post