முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உடனடி முத்தலாக் தடை மசோதா, மக்களவையில் நிறைவேறிய நிலையில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதாவுக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. மசோதா மீது மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன், மசோதாவில் உள்ள குறிப்பிட்ட சில அம்சங்களில் தங்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்று குறிப்பிட்டார்.
இதனால் தவறான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், தற்போதைய முத்தலாக் மசோதா அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான அம்சங்களைக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
Discussion about this post