முத்தலாக் தடை மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். முத்தலாக் தடை மசோதாவை சட்டமாக்க மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. மக்களவையில் நேற்று இம்மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று தாக்கல் செய்தார்.
பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற வேண்டியுள்ளதால் பாஜகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் அவைக்கும் வர வேண்டும் என அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. நிலுவையில் உள்ள முக்கிய மசோதாக்களை இன்று நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Discussion about this post