விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் விசுவநாத சுவாமி வீதி உலாவிற்கு முஸ்லிம்கள் வரவேற்பு கொடுத்த நிகழ்வு, அந்தப் பகுதி மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் விசுவநாத சுவாமி-விசாலாட்சி அம்மன் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இந்த விழாவில், சுவாமிக்கு 15 லட்ச ரூபாய் செலவில் புதிதாக செய்யப்பட்ட வெள்ளி ரிஷப வாகனம் உபயமாக வழங்கப்பட்டது. அதையடுத்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா ஊர்வலம் நடைபெற்றது. சிவ நெறியாளர்கள் திருமுறை பாடியும், பெண்கள் கையில் விளக்குகளை ஏந்தியும் அந்த ஊர்வலத்தில் சென்றனர். கீழ ரத வீதியை ஊர்வலம் அடைந்தபோது, அங்கிருந்த முஸ்லிம்கள் வரவேற்பு கொடுத்து, கோயில் நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தினர். சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் முஸ்லிம்களின் இந்தச் செயல், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு உறுதுணையாக இருக்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Discussion about this post