திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 5 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வரதராஜபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு புகார் தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதில் 2016 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான ஆவணங்களில் 9 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பதை கண்டறிந்தனர்.
இதனிடையே, அதிகாரிகளின் தகவலின்படி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாட்சியர் பீட்டர் லியோனார்ட், முறைகேட்டில் ஈடுபட்ட வரதராஜ புரம் தொடக்க வேளாண் செயலாளர் உள்ளிட்ட ஐந்து பணியாளர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து, ஐந்து பணியாளர்களும் பணி நீக்கம் செய்ய்யப்பட்டுள்ளனர்.
Discussion about this post