ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி சிறையில் முருகன் மீண்டும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், சமீபத்தில் 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநருக்கு முருகன் கடிதம் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கடந்த 2ம் தேதி முதல் முருகன் மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
Discussion about this post