கோவையில் நிகழ்ந்த இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
கடந்த 2010ஆம் ஆண்டு கோவை சுக்ரவார்பேட்டையை சேர்ந்த சகோதரி முஸ்கின் மற்றும் அவரின் சகோதரர் ரித்திக் ஆகிய சிறார்கள் கொலை செய்யப்பட்டு, பிஏபி வாய்க்காலில் இருந்து சடலாக கண்டெடுக்கப்பட்டனர். விசாரணையில் முஸ்கின் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. பள்ளி சிறார்களான இருவரின் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இரட்டை கொலை தொடர்பாக ஓட்டுநர் மனோகரன் மற்றும் மோகன கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில், மோகன கிருஷ்ணன் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொருவரான ஓட்டுநர் மனோகரனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனோகரன் மேல்முறையீடு செய்தார். இந்தநிலையில், உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை உறுதிசெய்த உச்ச நீதிமன்றம், கோவை இரட்டைக் கொலை தொடர்பாக மனோகரனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தது.
Discussion about this post